சினிமா

இதுதான் லாஸ்ட் வார்னிங்… தனுஷ் Vs நயன்தாரா… நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Published

on

இதுதான் லாஸ்ட் வார்னிங்… தனுஷ் Vs நயன்தாரா… நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நடிகை நயன்தாரா பற்றிய ஆவணப்படம் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி வெளியானது.

Advertisement

இதில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படக்காட்சியை பயன்படுத்தியதற்காக, ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும், அந்த காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் தனுஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வழக்கு விசாரணை வந்தபோது, நெட்பிளிக்ஸ் மற்றும் தனுஷ் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

வழக்கு விசாரணையானது இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

Advertisement

இதனையடுத்து இனி கால அவகாசம் கேட்கக்கூடாது என்று எச்சரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version