இலங்கை

கிளிநொச்சியிலும் பரவிய எலிக் காய்ச்சல்! இருவர் உயிரிழப்பு

Published

on

கிளிநொச்சியிலும் பரவிய எலிக் காய்ச்சல்! இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.

 நேற்றையதினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

Advertisement

கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்றிரீயாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

 கால்நடைகளின் சிறுநீர் நீருடன் கலந்து இருக்கும்போது மனிதர்கள் அந்த பகுதியில் நடமாடும்போது தோலில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் அல்லது காயங்கள் ஊடாக பரவுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், தலைவலி, கண் சிவப்பாக இருத்தல், உடல் நோவு, தசை நோவு, வயிற்று நோவு, இருமல், மூச்சு எடுத்தலில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

Advertisement

 எனவே மக்கள் காய்ச்சல் ஏற்பட்டாலும் இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

 இதைவிட தற்போதைய பனியுடனான காலநிலையில் சளி அதிகரித்து நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு அதனைவிட மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதிலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version