இலங்கை

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி! தலைமை ஏற்கிறாரா கஜேந்திரகுமார்?

Published

on

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி! தலைமை ஏற்கிறாரா கஜேந்திரகுமார்?

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (07) நண்பகல் ஒரு மணியளவில் பாராளுமன்றக்கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

Advertisement

இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது குறித்து ஆராயப்பட்டதுடன், அதுபற்றி தமிழ்த்தேசிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கான திகதியொன்றை நிர்ணயிப்பது குறித்தும் பேசப்பட்டது.

அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து, இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தீரமானிக்கப்பட்டது.

இச்சந்திப்பை எங்கு நடாத்துவது என வெகுவிரைவில் தீர்மானித்து அறிவிக்கப்படும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version