இலங்கை

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி குமுறல்!

Published

on

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி குமுறல்!

 சர்ச்சைக்களை தோற்றிவிப்பதில் பிரபலமான யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களினது நாடளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உள்ளது.

Advertisement

எனினும் அதற்கான நடவடிக்கையை சஜித் பிரேமதாச எடுக்கவில்லை என அர்ச்சுனா எம்.பி குற்றம் சுமத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்தது மேலே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீடு செல்வதற்கு இல்லை. தனக்கு உரையாற்றச் சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் நாடாளுமன்றம் வந்தும் பயனற்ற நிலைமை உள்ளதாக அருச்சுனா தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன, ”எதிர்க்கட்சி பிரதம கொறடாவுக்கு தொடர்பில் உரிய கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். அர்ச்சுனா எம்.பியின் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்க விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

தேர்தலிற்கு முன்னதாக சஜித் பிறேமதாசாவுடன் கூட்டுச்சேர அருச்சுனா முற்பட்டிரந்த போதும் அம்முயற்சி சாத்தியப்பட்டிருக்கவில்லை.அத்துடன் தேர்தல் கால சஜித் பிறேமதாசா தரப்பு பிரச்சார மேடையிலிருந்து அருச்சுனா வெளியேற்றப்பட்டுமிருந்தார்.

அதேவேளை தன்னை எதிர்கட்சி அலுவலகத்தில் வைத்து சஜித் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கியதாக கடந்த காலத்தில் குற்றச்சாட்டுக்களை அருச்சுனா எம்.பி முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version