சினிமா

பெண்மை குறித்து மோசமான கருத்து..அத்தூமீறல்.. நகைக்கடை அதிபரை கம்பி எண்ண வைத்த நடிகை ஹனி ரோஸ்..

Published

on

பெண்மை குறித்து மோசமான கருத்து..அத்தூமீறல்.. நகைக்கடை அதிபரை கம்பி எண்ண வைத்த நடிகை ஹனி ரோஸ்..

மலையாள சினிமாவில் 2005ல் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஹனி ரோஸ். கடந்த 2023ல் பலையாவுடன் ஜோடியாக நடித்தும் அம்மாவாக நடித்தும் இருந்தார்.இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ, கடைத்திறப்புவிழா நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவை கவர்ந்து வருகிறார்.சமீபத்தில் தன்னுடைய புகைப்படங்கள் பதிவில் இரட்டை அர்த்தத்துடன் அவதூறான கருத்துக்களை தெரிவித்த 30 பேர் மீது புகாரளித்து கைது செய்யவைத்தார் ஹனி ரோஸ்.இந்நிலையில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி கண்ணூர் அலகோட்டில் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது கடைத்திறப்பு விழாவுக்கு என்னிடம் பாலியல் அத்துமீறலில் அந்த நகை கடையின் அதிபர் ஈடுபட்டார். அதன்பின் அவரது வேறொரு கடைத்திறப்பு விழாவுக்கு என்னை அழைத்தபோது நான் அதில் கலந்து கொள்ளமுடியாது என்று கூறிவிட்டேன்.பின் தொடர்ந்து என்னை வற்புறுத்தி அழைத்தும் நான் வரமுடியாது என்று மறுத்துவிட்டதால், சமூகவலைத்தளங்களில் என்னை ஆபாசமாக சித்தரித்தும் இரட்டை அர்த்ததில் என் பெண்மை குறித்து மிகவும் மோசமான கருத்துக்களை அவரின் கூட்டாளிகள் வெளியிட்டு வருகின்றனர் என்று நடிகை ஹனி ரோஸ் புகாரளித்துள்ளார். இதனை தொடர்ந்து பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டார்.மேலும் ஹனி ரோஸ் அவரது இன்ஸ்டாகிராமில், செம்மனூர் அதிபர் மீதும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் நான் உறுதியாக இருப்பதாகவும் உங்களின் கூட்டாளிகள் மீதும் விரைவில் புகார்கள் அளிப்பேன், நீங்கள் உங்களுக்கு இருக்கும் பணபலத்தை நம்பலாம் நான் இந்தியாவின் நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன், நிச்சயம் நியாத்தை கொடுக்கும் என்றும் ஹனி ரோஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version