இலங்கை

வவுனியாவில் உளுந்து செய்கையில் மஞ்சள் நோய் தாக்கம்!

Published

on

வவுனியாவில் உளுந்து செய்கையில் மஞ்சள் நோய் தாக்கம்!

வவுனியாவில் பயிர்ச்செய்கைகளில் ஒன்றாக உளுந்துச்செய்கை காணப்படுகின்ற போதிலும் இம்முறை மஞ்சள் நோய் தாக்கத்தினால் விளைச்சல் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்

பல ஏக்க நிலப்பரப்பில் விழுந்துச்செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பின்னரான கால பகுதியில் ஏற்பட்ட மஞ்சள் நோய் தாக்கத்தினால் உளுந்து செய்கையில் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் அதனை கட்டுப்படுத்த ஏதுவான முறைகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்

Advertisement

உளுந்துக்கு விலை நிர்ணயம் இல்லாமையாலும் தாம் செலவு செய்யும் பணத்தை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படும் நிலையில் இவ்வாறு நோய் தாக்கங்களும் தொடர்ந்து வருவதனால் நாம் எதிர்வரும் காலங்களில் உளுந்துச் செய்கையை கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5650 கெக்டெயரில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளதாகவும் மஞ்சள் நோய் தாக்கம் பயிர்களில் ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version