இலங்கை

வெளிநாட்டில் அக்கா… இலங்கையில் உள்ள சகோதரி வீட்டில் மோசமான செயலில் ஈடுபட்ட சகோதரன்!

Published

on

வெளிநாட்டில் அக்கா… இலங்கையில் உள்ள சகோதரி வீட்டில் மோசமான செயலில் ஈடுபட்ட சகோதரன்!

சிலாபத்தில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டு பொதி செய்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகை கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சிலாபத்தில் உள்ள கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரெப்புவத்தை பகுதியிலேயே குறித்த வீடு அமைந்துள்ளது.

Advertisement

குறித்த வீட்டிலிருந்து சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ கிராம் கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, கடந்த 06 ஆம் திகதி மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

இத்தாலியில் வசிக்கும் உரிமையாளரான பெண் சிலாபத்தில் உள்ள தனது வீட்டை பராமரிப்பதற்காக தனது சகோதரருக்கு வழங்கியுள்ளார்.

இதேவேளை, வீட்டை கவனித்துக்கொள்வதற்காக குறித்த பெண் ஒவ்வொரு மாதமும் சகோதரருக்கு பணம் அனுப்புவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவரின் சகோதரர் ஏனையவர்களுடன் இணைந்து போதைப்பொருள் விற்பனைக்காக அந்த வீட்டினை பயன்படுத்தி வந்துள்ளது பொலிஸார் நடாத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த வர்த்தக நடவடிக்கை தொடர்பில் இத்தாலியில் உள்ள வீட்டின் உரிமையாளரான பெண்ணுக்கு தெரியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தியவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கொண்டுவரப்பட்ட கஞ்சா கையிருப்பை இவர்களுக்கு வழங்க பன்னல பகுதியில் கடத்தல்காரர் ஒருவர் செயற்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

வென்னப்புவ சிந்தாத்திரிய, வாய்க்கலை, நீர்கொழும்பு, பெரியதுகல மற்றும் கட்டுவா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

அவர்கள் 22 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version