இலங்கை

உலகில் மிகவும் தூய்மையான உணவுப் பொருள் எது தெரியுமா?

Published

on

உலகில் மிகவும் தூய்மையான உணவுப் பொருள் எது தெரியுமா?

பூமியில் உள்ள அனைத்து உணவு பொருட்களும் 100% தூய்மையாக இருக்கும் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. உணவுப் பொருளுடன் ஏதேனும் ஒன்று சேர்க்கும் போது மிகக் குறைந்த அளவு மாசு ஏற்படும்.

உலகில் தூய்மையான உணவுப் பொருள் எது என்று கேட்டால் நம் நினைவுக்கு உடனடியாக பால் வரக்கூடும். ஆனால் இது சரியான விடை கிடையாது. பாலில் கூட சில சமயம் மாசு, தூசுகள், கலப்படம் உள்ளிட்டவை நிகழ்ந்து விடுகின்றன.

Advertisement

ஒவ்வொரு மாடுகளுக்கும் பாலின் தரம் வித்தியாசப்படும்.

நெய் தான் உலகின் மிகவும் தூய்மையான உணவுப் பொருளாக உள்ளது.

பழங்கால சாஸ்திரங்களில் கூட நெய் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக பசு நெய்யை முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். உணவு பொருள் மட்டும் இன்றி, பூஜைகளுக்கும் இந்த நெய் தான் பயன்படுத்தப்படுகிறது.

Advertisement

விஞ்ஞானத்தின் அடிப்படையிலும் பசு நெய் தான் மிகவும் தூய்மையானதாக கருதப்படுகிறது. இதில் சிறிதளவு கூட கலப்படம் கிடையாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நெய் என்ற பெயரில் கலப்படமான பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை பார்க்க முடியும்.

அதை தூய்மையான உணவு என்று கூற முடியாது. ஆனால் வீட்டிலேயே பால் வெண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் நெய் முழுக்க முழுக்க தூய்மையானது என்று கூறலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version