இந்தியா

கிச்சன் கீர்த்தனா : பெஸ்டோ – பனீர் பொங்கல்

Published

on

கிச்சன் கீர்த்தனா : பெஸ்டோ – பனீர் பொங்கல்

பெஸ்டோ என்பது இத்தாலி உணவு வகை. இதை நாம் சாப்பிடும் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். கடைகளிலும் கிடைக்கும். அதைத் தவிர்த்து வீட்டிலேயே பெஸ்டோ தயாரித்து, பனீருடன் சுவையான பொங்கல் செய்து அசத்தலாம்.

பச்சரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – 1/8 கப்
வெஜிடபிள் ஸ்டாக் (அ) தண்ணீர் – 4 கப்
பனீர் – 100 கிராம் (சிறிய துண்டுகளாக்கவும்)

Advertisement

கொத்தமல்லித்தழை – 2 கப்
முந்திரி குருணை – அரை கப்
எண்ணெய் – கால் கப்
பச்சை மிளகாய் – ஒன்று (நடுத்தர அளவு)
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் –  அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரிசியுடன் பருப்பு சேர்த்துக் கழுவவும். அதனுடன் வெஜ் ஸ்டாக் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு பனீர் துண்டுகளை அடுக்கி இருபுறமும்  டோஸ்ட் செய்து எடுக்கவும். வெறும் வாணலியில் முந்திரி குருணையைச் சேர்த்து வறுத்து எடுத்து, பெஸ்டோ செய்ய கொடுத்துள்ள மற்ற பொருள்களுடன் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வெந்த பொங்கலுடன் பனீர் துண்டுகள், அரைத்த விழுது சேர்த்துச் சூடாக்கி இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version