சினிமா

ஜனவரி 10ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்.. இந்த வீக் எண்ட் ஒன்னு கூட தேறலையே

Published

on

ஜனவரி 10ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்.. இந்த வீக் எண்ட் ஒன்னு கூட தேறலையே

இந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டுகிறது. அதில் வணங்கான், கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா ஆகிய படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

அதில் ஜனவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் முக்கிய படங்கள் வெளியாகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்காக ஆடியன்ஸ் பெரிதும் காத்திருக்கின்றனர்.

Advertisement

ஆனால் வார இறுதியை என்ஜாய் செய்யும் அளவுக்கு படங்கள் எதுவும் வரவில்லை என்பதுதான் உண்மை. அதன்படி இந்த வாரம் டிஜிட்டலுக்கு வரும் 7 படங்களை பற்றி காண்போம்.

தமிழை பொருத்தவரையில் சிம்ப்ளி சவுத் தளத்தில் திரும்பி பார் நாளை வெளியாகிறது. இதைத் தவிர மற்றவை எல்லாமே வேறு மொழி படங்கள் தான்.

அதில் தெலுங்கு படங்களான பிரேக் அவுட் ETV Win தளத்திலும் ஹைட் அண்ட் சீக் ஆஹா தமிழ் தளத்திலும் வெளியாகிறது. ஹிந்தி படமான கோல்ட் பிஷ் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

Advertisement

அதை அடுத்து பிளாக் வாரண்ட் என்ற ஹிந்தி சீரிஸ் netflix தளத்தில் வெளியாகிறது. அதன் தொடர்ச்சியாக அதே தளத்தில் ஐ அம் அ கில்லர் ஹாலிவுட் சீரிஸ் சீசன் 6 வெளியாகிறது.

மேலும் ஹிந்தி படமான தி சபர்மதி ரிப்போர்ட் ஜீ5 தளத்தில் வெளியாகிறது. இப்படியாக ஏழு படங்கள் வெளியாகினாலும் ஒன்று கூட தேறவில்லை என்பதுதான் ஆடியன்ஸின் கருத்து.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version