இலங்கை

நிதி தர மறுத்தால் எலிக்காய்ச்சல் வந்து மரணிப்பாய்… மதகுரு உட்பட இருவர் அதிரடி கைது!

Published

on

நிதி தர மறுத்தால் எலிக்காய்ச்சல் வந்து மரணிப்பாய்… மதகுரு உட்பட இருவர் அதிரடி கைது!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி அடாவடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதகுரு உள்ளிட்ட இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக தேசிய மக்கள் சக்தி கட்சியையும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் பெயரையும் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தி இருவரும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் நேற்று (08-01-2025) நெல்லியடி நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது நிதி கொடுக்க மறுத்தவர்களை ஜனாதிபதியின் ஒளிப்படத்தைக் காண்பித்து, அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற முற்பட்டபோது வர்த்தகர்களுக்கும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

நிதி சேகரிப்பில் ஈடுபட்ட மதகுரு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந்நிதி பயன்படுத்துவதாகவும் தெரிவித்து நிதியை சேகரித்துள்ளனர்.

Advertisement

ஆனாலும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கியிருக்கவில்லை.

இதேவேளை, நிதி தர மறுத்தவர்களை “எலிக்காய்ச்சல் வந்து சாவாய்” என்றும், “அநுரவை நான் தான் யாழ்ப்பாணம் அழைத்து வந்தேன்” எனவும் “அநுர ஆட்களைப் பற்றித் தெரியும்தானே” எனவும் அச்சுறுத்தினர் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version