சினிமா

நீ எல்லாம் நடிகையா..திருநங்கைன்னு சொன்னாங்க..ஸ்ரீகாந்த் பட நடிகை ஓப்பன் டாக்..

Published

on

நீ எல்லாம் நடிகையா..திருநங்கைன்னு சொன்னாங்க..ஸ்ரீகாந்த் பட நடிகை ஓப்பன் டாக்..

நடிகர் பிரசாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வெளியாகவுள்ள படம் தினசரி. அமெரிக்காவை சேர்ந்த தயாரிப்பாளரான சிந்தியா என்பவர் தயாரித்து நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியானது.அதில் நடிகையை பார்த்து பலரும் கண்டபடி விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து ஸ்ரீகாந்தும் நடிகை சிந்தியாவுக்கு ஆதவாக பேசியிருந்தார்.இந்நிலையில் சிந்தியா சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்க்கிறேன், அதில் ஈட்டும் பணத்தை வைத்துதான் படம் தயாரிக்கின்றேன். என்னை பலர் மிகவும் மோசமாக விமர்சிக்கிறார்கள். இதனை நான் எதிர்ப்பார்க்கவில்லை. எனக்கு மிகவும் மன உளைச்சலைத்தான் அந்த விமர்சனங்கள் கொடுத்தன.சிலர் என்னை திருநங்கை, சிலர் பணம் இருந்தால் நடிப்பியா? யார் இதெல்லாம் பார்க்குறது? ஸ்ரீகாந்துக்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா? என்றெல்லாம் பேசுகிறார்கள்.கமெண்ட் செக்ஷனைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாகவும் அதேசமயம் யாரோ சிலர் எனக்கு ஆதரவாக கமெண்ட் செய்தது மட்டுமில்லாமல் மோசமான கமெண்ட் செய்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version