இலங்கை

பயணப்பையை தொலைத்து தவித்த வெளிநாட்டு பிரஜை; சிலமணிநேரங்களில் மீட்ட அதிகாரிகள்

Published

on

பயணப்பையை தொலைத்து தவித்த வெளிநாட்டு பிரஜை; சிலமணிநேரங்களில் மீட்ட அதிகாரிகள்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சென்ற இந்திய பிரஜையின் காணாமல் போன பயணப்பையை ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் வட்டவளை பொலிஸார் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர்.

எல்லவுக்குப் பயணம் செய்த 39 வயதுடைய சுற்றுலாப் பயணியின் பயணப்பை வட்டவளை மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில் காணாம் போயிருந்தது.

Advertisement

பயணப்பையை தொலைத்தவர் அது தொடர்பில் ஹட்டன் ரயில் நிலைய அதிபரிடம் அவர் முறையிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காணாமல் போன பயணப்பை போன்ற ஒரு பையுடன் ரயிலில் வந்த ஒருவர் முச்சக்கர வண்டியில் வட்டவளை பகுதிக்கு பயணம் செய்தமை உறுதி செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியைக் கண்டுபிடித்து விசாரித்தபோது, ​​கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தில் அத்தகைய பையுடன் ஒருவர் ஏறியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

பின்னர் சம்பந்தப்பட்ட பேருந்து, டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த போது வெளிநாட்டவரின் பயணப்பை அங்கு மீட்கப்பட்டுள்ளது.

தனது பயணப்பையை கண்டுபிடித்ததற்கு இந்திய நாட்டவர் நன்றி தெரிவித்த நிலையில் , யாரோ ஒருவர் தவறுதலாக பையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் பயணப்பையை எடுத்துச் சென்ற நபரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை நடத்தி வருவதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version