சினிமா

பல வருடங்கள் கழித்து தல அஜித் கொடுத்த பேட்டி…! வைரலாக ஷேர் செய்யும் ரசிகர்கள்!

Published

on

பல வருடங்கள் கழித்து தல அஜித் கொடுத்த பேட்டி…! வைரலாக ஷேர் செய்யும் ரசிகர்கள்!

பிரபல நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களின் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார். தற்போது கார் ரேசிங்கில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பல வருடங்கள் கழித்து அஜித்குமார் கொடுத்த பேட்டி வீடியோ வைரலாகி வருகிறது.அஜித்தின் படங்களை ஒரே சமயத்தில் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் காத்திருந்த நிலையில் பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இது அஜித் ரசிகர்களை மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தியது. இருப்பினும் அவர்களை மகிழ்விக்கும் வகையில் அஜித் கார் பந்தயத்தில் பல வருடங்கள் கழித்து கலந்துகொண்டு வருகின்றார்.அஜித் கார் பந்தயத்தில் அதற்கான பயிற்சிகளை தற்போது தீவிரமாக செய்துகொண்டு வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு கார் பந்தய பயிற்சியின் போது சிறிய விபத்து ஏற்பட்டது. அந்த வீடியோவை பார்க்கும்போதே நெஞ்செல்லாம் பதறியது. இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அஜித் எந்த வித காயமும் இன்றி தப்பிவிட்டார். இதனால் அஜித் ரசிகர்கள் அவரை கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன் பிறகு தற்போது மீண்டும் அஜித் பயிற்சியை துவங்கியுள்ளார். கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வரும் அஜித் அங்கு பல வருடங்கள் கழித்து பேட்டிகொடுத்துள்ளார். அஜித் கொடுத்த பேட்டி இணையத்தில் கசிந்துள்ளது. அஜித் பேசும் வீடியோ மட்டுமே லீக்காகி உள்ளது கூடிய விரைவில் முழு வீடியோ வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version