சினிமா

பிரேம்ஜிக்கு விவாகரத்தா? அந்த நடிகை பின் சுற்றியவர்.. ஓவராக பேசிய பிரபலம்

Published

on

பிரேம்ஜிக்கு விவாகரத்தா? அந்த நடிகை பின் சுற்றியவர்.. ஓவராக பேசிய பிரபலம்

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி. கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் நடித்தார்.ஆனால், இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. பேச்சுலராக இருந்து வந்த பிரேம்ஜி ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவை திருத்தணி முருகன் கோயிலில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் பிரேம்ஜியின் மனைவி இந்து பேட்டி ஒன்றில் இவர்கள் திருமணத்தில் தன் குடும்பத்தினர் யாருக்கும் விருப்பமே இல்லை என்று கூறியிருந்தார்.இந்நிலையில், பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறிய விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில், ” பிரேம்ஜி – இந்து திருமணத்தை அவரின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததற்கு ஒரு காரணம் இருக்கிறது.பிரேம்ஜி வயதானவர், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது மிகவும் மோசமானதாக உள்ளது. இந்துவிற்கு வேண்டும் என்றால் இது தெய்வீக காதலாக இருக்கலாம். ஆனால் பிரேம்ஜியை பொருத்தவரை அப்படி இல்லை.சில வருடங்களுக்கு முன்பு தான் ஒரு நடிகை பின்னால் சுற்றி கொண்டிருந்தார். அவருக்கு இன்னும் 10 ஆண்டுகள் உள்ளது அதற்குள் அவர் தனது திறமையை நிரூபித்துவிட்டால் சரி, இல்லை என்றால் இந்த திருமணம் கடைசியில் விவகாரத்தில் தான் முடியும்” என்று கூறியுள்ளார்.         

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version