சினிமா

பேசாம ஆஸ்காருக்கு அனுப்புவோமா? கலகலப்பாய் வெளியான ” ட்ரீம் சோங்” ப்ரோமோ!

Published

on

பேசாம ஆஸ்காருக்கு அனுப்புவோமா? கலகலப்பாய் வெளியான ” ட்ரீம் சோங்” ப்ரோமோ!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது அஸ்வத் மாரிமுத்துவின் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி வைரலாக நிலையில் தற்போது “வழித்துணையே” பாடலின் கலகலப்பான ப்ரோமோ ரிலீசாகி வைரலாகி வருகிறது. டிராகன் திரைப்படத்தில் பிரதீப், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் யூடியூப்பில் கலக்கும் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரீம் சோங் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிரதீப் ” பிரான்ஸ்,சுவிஸ்ட்லாண்ட்,வெனிஸ்னு வெளிநாடு எல்லாம் வந்து இந்த படத்தை பண்ணுறோம்  ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவமா என்று கேட்கிறார். அதற்க்கு இயக்குநர் அதிர்ச்சியாகி மனசாட்ச்சி எல்லாம் தமிழ் நாட்டுலையே பூட்டி வச்சிட்டு வந்துருவீங்களா நீங்க என்று கலகலப்பாக பேசுவதுடன் ட்ரீம் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் இந்த காதல் பாடல் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் வெனிஸ் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ‘ வழித்துணையே ‘ பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சஞ்சனா கலமஞ்சே பாடியுள்ளனர் மற்றும் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடல் ப்ரோமோ வெளியான நிலையில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version