பொழுதுபோக்கு
ரிலீஸ்க்கு முன்பே வசூலை குவிக்கும் ‘கேம் சேஞ்சர்’: தமிழ்நாடு உரிமம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ்க்கு முன்பே வசூலை குவிக்கும் ‘கேம் சேஞ்சர்’: தமிழ்நாடு உரிமம் எவ்வளவு தெரியுமா?
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி (நாளை) வெளியாக உள்ள நிலையில், இந்த மெகா பட்ஜெட் படம் பிரமாண்டமாக பான் இந்தியா படமாக வெளியாக தயாராகி வருகிறது.இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அடுத்து அவர் இயக்கத்தில் வெளியாக உள்ள, கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம், ரிலீஸுக்கு முந்தைய வசூலில் சாதனை படைத்து வருகிறது.’கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமைகள் ரூ.25 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகதமாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும், ஷங்கர் – ராம் சரண் கூட்டணி, தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. படத்தின் தமிழ்நாடு உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டதன் மூலம், படத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.அதேபோல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட விநியோகஸ்தர் தான் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தமிழ்நாடு உரிமைகளை வாங்கியுள்ளார், இது லக்கி பாஸ்கர் படம் போலவே அவருக்கு வெற்றிகரமான முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கேம் சேஞ்சர்’ மூலம் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். இது ஒரு அரசியல் அதிரடி படம் என்று கூறப்படுகிறது.ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம் நந்தன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஊழலுடன் போராடி, ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரியான தனது சகோதரருடன் தனிப்பட்ட மோதல்களை எதிர்கொள்வது தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் ஒரு பிரமாண்டமான சினிமா அனுபவத்தை உருவாக்கும் வகையில் இருந்தது,மேலும் படத்திற்கான முன்பதிவுகள் எல்லா இடங்களிலும் வேமாக நடந்து வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க தயாரிப்பாளர்கள் படத்தை விரிவாக விளம்பரப்படுத்தி வருகின்றனர், மேலும் அவர்கள் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“