சினிமா

அஜித் சாரோட கனவு இது! இன்னும் 3 வருசத்துல நானும் இதை செய்வேன்- நடிகர் ஆரவ்

Published

on

அஜித் சாரோட கனவு இது! இன்னும் 3 வருசத்துல நானும் இதை செய்வேன்- நடிகர் ஆரவ்

பிரபல நடிகர் அஜித் தற்போது துபாயில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டு வருகிறார். 24 ஹவஸ் ரேஷிங் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் துபாயில் அஜித் கார் ரேசிங் பார்ப்பதற்கு கலந்து கொண்ட  நடிகர் ஆரவ் “அஜித்தின் கார் ரேசிங் குறித்து பேசியுள்ளார். கடந்த ஆண்டு ‘அஜித்குமார் ரேஸிங் டீம்’ என்ற குழுவைத் தொடங்கி ரேஸிங் களத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அஜித். தற்போது அந்தக் குழுவுடன் கார் பந்தயத்தில் இறங்கியிருக்கிறார். இந்த நிகழ்வில் அஜித்துடன் `விடாமுயற்சி’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கும் ஆரவ் கலந்துகொண்டு பேசியுள்ளார்.அவர் கூறுகையில் “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இந்த ரேஸ் அஜித் சாரோட கனவு. அஜித் சார், இந்த ரேஸுக்காக திட்டமிட்டத்துல இருந்து இப்போ வரைக்கும் நாங்க இருந்திருக்கோம். இது சாருக்கு எப்படியான கனவுன்னு எங்களுக்கு தெரியும். அதுல நாங்களும் பயணிச்சிருக்கிறது மகிழ்ச்சி. இந்த நிகழ்வுக்கு பின்னாடி அஜித் சாரோட ஆறு மாத கடின உழைப்பு இருக்கு என்று கூறியுள்ளார்.மேலும் “இந்த நாள் அஜித் சாருக்கு, எங்களுக்கு, மொத்த அஜித்குமார் ரேஸிங் டீமுக்கும் ரொம்பவே முக்கியமானது. எனக்கும் அஜித் சாருக்கும் ஆட்டோமொபைல் ரொம்ப பிடிக்கும். அதனால சினிமாவை தாண்டி இந்த மாதிரியான விஷயங்கள் பேசுறதுக்கு அதிகமாக இருக்கும். எனக்கும் பைக் ரேஸ்ல கலந்துக்கணும்னு ரொம்பவே ஆசை இருந்தது. ஆனால், சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு உடலும், முகமும் ரொம்பவே முக்கியம். பைக் ரேஸ் இல்லைனாலும் கார் ரேஸ்ல கலந்துக்கணும்னு ஆசை இருக்கு. அடுத்த 3 வருஷத்துல நானும் இந்த மாதிரியான ரேஸ்ல கலந்துகொள்ளுவேன் என்று கூறியுள்ளார் .

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version