இலங்கை
ஜகத் விக்கிரமரத்னவுக்கு அழைப்பு விடுத்துள்ள இந்தியத் தூதுவர்!
ஜகத் விக்கிரமரத்னவுக்கு அழைப்பு விடுத்துள்ள இந்தியத் தூதுவர்!
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 780 மில்லியன் டொலர் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பூர்த்தியாக்கப்பட்ட திட்டங்களுக்கு 390 மில்லியன் ரூபாவும், செயற்படுத்தப்பட்டு வரும் சில திட்டங்களுக்கு 211 மில்லியன் ரூபாவும், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கென 65 மில்லியன் ரூபாவும் சமிக்ஞை விளக்குகளுக்கென 14.9 மில்லியன் ரூபாவும் இந்தியாவால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே, இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள உருவாக்கும் தனது விருப்பத்தை சந்தோஷ் ஜா வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அழைப்பு விடுத்துள்ளார்.