தொழில்நுட்பம்
தமிழ் வழியில் எளிதாக ஆங்கிலம் கற்கலாம்: ‘டியோலிங்கோ’ புதிய அம்சம் அறிமுகம்
தமிழ் வழியில் எளிதாக ஆங்கிலம் கற்கலாம்: ‘டியோலிங்கோ’ புதிய அம்சம் அறிமுகம்
டியோலிங்கோ, மிகவும் பிரபலமான மொழி கற்றல் செயலி ஆகும். இப்போது இது தமிழ் மொழி பேசுபவர்கள் சுலபமாக ஆங்கிலம் கற்க ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. தமிழ் மொழி பேசுபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற வசதியாக ‘Learn English From Tamil’ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழ் மொழி பேசுபவர்கள் இப்போது டியோலிங்கோவின் கேமிஃபைட் லேர்னிங் தளத்தைப் பயன்படுத்தி தங்கள் ஆங்கிலத் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.பெங்காலி, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிக்குப் பிறகு இந்திய மொழியில் டியோலிங்கோ தமிழ் மொழியை சேர்த்துள்ளது. பிராந்திய மொழிகளில் பாடங்களைக் கொண்டு, டியோலிங்கோ மற்ற மொழி கற்றலுக்கான தடைகளைத் தகர்த்தெறிந்து அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது.அதுவும் வெறுமனே பாடமாக இல்லாமல் கேமிங், வினாடி வினா என விளையாட்டு முறையில் மொழிகளை கற்க உதவுகிறது. அதுவும் முற்றிலும் இலவசமாக பயனர்கள் மொழிகளை கற்றுக் கொள்ளலாம்.