இலங்கை

தலைமுடி வெட்டியதால் பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு

Published

on

தலைமுடி வெட்டியதால் பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு

  வெல்லவாய , மெதகலகம பிரதேசத்தில் தலைமுடி வெட்டியதால் பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

Advertisement

சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனின் தலைமுடியை வெட்டுமாறு அவனது தாயாரிடம் பாடசாலையில் அறிவுறுத்தப்பட்டிருந்த காரணத்தினால், தாய் மாணவனின் தலைமுடியை சிறிதளவு வெட்டியுள்ளார்.

இதன்போது மாணவனுக்கும் அவனது தாய்க்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version