இலங்கை

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு!

Published

on

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு!

காலி – அஹுங்கல்ல பகுதியில் நேற்று (09) காலை  நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று இரவு அஹுங்கல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் அஹுங்கல்ல, பொல்லத்துகந்த பகுதியில் உள்ள ஒரு இலவங்கப்பட்டை தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

நேற்று காலை 6:15 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காயமடைந்த நபர் “லொக்கு பெட்டி” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version