தொழில்நுட்பம்

10 ஆயிரம் ரயில் எஞ்சின்களில் ‘கவாச்’ தொழில்நுட்பம்… அப்படியென்றால் என்ன? அது எப்படி பயன்படுகிறது?

Published

on

Loading

10 ஆயிரம் ரயில் எஞ்சின்களில் ‘கவாச்’ தொழில்நுட்பம்… அப்படியென்றால் என்ன? அது எப்படி பயன்படுகிறது?

நாடு முழுவதும் 10,000 ரயில் எஞ்சின்களில் ‘கவாச்’ தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது என சென்னையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று கூறினார். ரயில் விபத்துகளை தடுக்கும் நோக்கில்  இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பபட்டது. ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) “பூஜ்ஜிய விபத்துகள்” (zero accidents) என்ற நோக்கத்துடன் கவாச்  என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியது.ரயில்வேயின் கூற்றுப்படி, இது மிகக் குறைந்த விலையில் தானியங்கி ரயில் மோதல் தடுப்பு தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பமானது மிக உயர்ந்த சான்றிதழ் நிலை, பாதுகாப்பு ஒருமைப்பாடு நிலை 4 (SIL-4) (Safety Integrity Level ) சான்றிதழைக் கொண்டுள்ளது.கவாச் எப்படி வேலை செய்யும்?விபத்துகளை தவிர்க்க கவாச் உயர் அதிர்வெண் ரேடியோ தகவல்தொடர்புகளைப் பயன்படுத்துகிறது மற்றும் ரயில் நகர்வதை தொடர்ந்து அப்டேட் செய்யும். ரயில் ஓட்டுநரால் ப்ரேக் பிடிக்க முடியாமல் போனால் அந்த சமயத்தில் கவாச் தானாகவே ப்ரேக் அப்ளை செய்து ரயிலை நிறுத்தும்.அதே நேரம் அருகில் உள்ள பாதையில் மற்ற ரயில்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய. இந்த கவாச் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட உடன்  5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து ரயில்களும் சிக்னல் அனுப்பபடும் எனத் தெரிவிக்கப்பபட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version