வணிகம்
Gold Rate: தொடர்ந்து 3 வது நாளாக அதிகரித்த தங்க விலை…சவரனுக்கு ரூ. 200 அதிகரித்தது!
Gold Rate: தொடர்ந்து 3 வது நாளாக அதிகரித்த தங்க விலை…சவரனுக்கு ரூ. 200 அதிகரித்தது!
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது.அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) 15%-லிருந்து 6 % ஆக குறைப்பு என்றும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4% குறைக்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.இந்த நிலையில், தங்கம் விலை நேற்றை போல் இன்றும் ஏற்றம் கண்டது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத காணாத அளவிற்கு குறைந்து வந்த சூழலில், இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்து இருப்பது நகைப்பிரியர்களுக்கும் இல்லத்தரசில்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 58,280 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 25 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,285-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,947 -க்கும், ஒரு சவரன் ரூ. 63,576-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 101 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 1,01,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.