பொழுதுபோக்கு

“திரைத்துறையில் இருந்து ஒருவர் கூட உதவவில்லை”: மனம் திறந்த கௌதம் வாசுதேவ் மேனன்

Published

on

“திரைத்துறையில் இருந்து ஒருவர் கூட உதவவில்லை”: மனம் திறந்த கௌதம் வாசுதேவ் மேனன்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு எக்ஸ் தள பக்கத்தில், துருவ நட்சத்திரம் திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என கௌதம் வாசுதேவ் மேனன் பெயரில் ஒரு போலி கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால், நீண்ட கால காத்திருப்பில் இருந்த மத கஜ ராஜா உள்ளிட்ட பல படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில், துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமானது இல்லை என அறிந்து பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.  ஆங்கிலத்தில் படிக்கவும்: Gautham Vasudev Menon says no one in Tamil industry helped in ‘time of need’: ‘Even when a film succeeds, people are unhappy’ இந்த சூழலில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனை யூடியூபர் மதன் கௌரி நேர்காணல் எடுத்திருந்தார். அப்போது துருவ நட்சத்திரம் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கௌதம் வாசுதேவ் மேனன் மனம் திறந்து கூறியிருந்தார். அப்போது, “துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது அது குறித்து திரைத்துறையைச் சேர்ந்த யாரும் என்னிடம் கேட்கவில்லை. அது குறித்து யாரும் கவலைப்படவும் இல்லை. திரையுலகம் அவ்வாறு தான் இயங்குகிறது. ஒரு படம் வெற்றிபெற்றால் இங்கு யாரும் மனதார மகிழ்ச்சி அடைவதில்லை. இதை கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை. எனினும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அடிக்கடி துருவ நட்சத்திரம் திரைப்படம் தொடர்பாக என்னிடம் கேட்டுக் கொண்டு இருப்பார். இயக்குநர் லிங்குசாமியும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். இருந்த போதிலும் அவர்களுக்கும் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதை நான் புரிந்து கொண்டேன்” என கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.மேலும், “துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் ஒன்றும் புதிது அல்ல. பல திரைப்படங்களுக்கு நடப்பது தான். இது ஒன்றும் புரிந்து கொள்ள முடியாத ராக்கெட் சைன்ஸ் இல்லை. நான் தயாரித்ததால் தான் இப்படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், நான் இப்படத்தை தயாரிக்கவில்லை. இப்படத்தை வெளியிடும் பணியை தான் நான் செய்தேன். படம் ரிலீஸ் தொடர்பான பிரச்சனையை யாரும் கண்டுகொள்ளவில்லை. அது தொடர்பாக என்னிடம் பேசவும் இல்லை. இப்படம் நிச்சயம் வெளியாகும் என நான் நம்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடித்திருக்கும் டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் என்ற திரைப்படம் விரையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version