பொழுதுபோக்கு

துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் அணி; மனைவி ஷாலினி, மகள் பூரிப்பு

Published

on

துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் அணி; மனைவி ஷாலினி, மகள் பூரிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார், தனக்கு பிடித்த கார் பந்தயத்தில் இன்று வெற்றி வாகை சூடியுள்ளார். கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு அவரது மனைவி ஷாலினி, மகள் அனௌஷ்கா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் அணியான பாஸ் கோட்டனின் அஜித் குமார் ரேசிங் 991 பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் அவர் GT4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் அங்கீகாரத்தையும் பெற்றார்.நடிகர் அஜித் குமார் துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற பிறகு, மனைவி ஷாலினி மகள் அனௌஷ்கா ஆகியோருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட காட்சி வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். எந்தளவுக்கு உயரத்துக்கு சென்றாலும் மனைவியையும் குடும்பத்தையும் ஒரு மனிதன் எப்படி மதிக்க வேண்டும் என்றும் L&T தலைவர் சுப்ரமணியம் அஜித்தின் இந்த வீடியோவை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் அவரையும் சேர்த்து ட்ரோல் செய்து வருகின்றனர். துபாய் கார் பந்தயத்தில் வெற்றிவாகை சூடிய உற்சாகத்தில் தனது குடும்பத்தை பார்த்த நடிகர் அஜித் குமார் தனது அன்பை வெளிப்படுத்தினார். அஜித் மனைவி ஷாலினி தனது கணவர் துபாய் கார் பந்தயத்தில் சாதித்துவிட்டார் என அவரை ரசித்து ஷாலினி ஃபிளையிங் கிஸ் கொடுத்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.விஜய்யுடன் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட 2 படங்களில் ஷாலினி நடித்திருந்தார். ஆனால், அஜித் குமாருடன் அவர் அமர்க்களம் எனும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அந்த படத்தில் நடிக்கும் போதே இருவருக்கும் காதல் மலர கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். அஜித் மற்றும் ஷாலினி தம்பதிக்கு 17 வயதில் அனோஷ்கா என்கிற மகள் உள்ளார். ஆத்விக் என்கிற மகனும் உள்ளார். துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் டீம் கலந்துக் கொண்டது. நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் தனது அணியில் போட்டியிடவில்லை என விலகினாலும் அணியின் உரிமையாளராக தொடர்ந்தார். ஆஸ்திரிய அணியில் சேர்ந்துக் கொண்டு கார் ஓட்டியும் அசத்தினார். இதில், நடிகர் அஜித் குமாரின் அணி கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து பதக்கத்தை வென்றது. துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாரை, நடிகர் மாதவன், நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்  ஆகியோர் துபாய்க்கு நேரில் சென்று கார் பந்தயத்தை நேரில் கண்டுகளித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்ல அஜித் ரசிகர்கள் பலரும் கார் பந்தயத்தைக் காண துபாய்க்கு சென்றிருந்தனர்.நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தில் வெற்றிப் பெற்ற நிலையில், தனது மனைவி ஷாலினியை கட்டியணைத்து அவருக்கு நன்றி கூறினார். தனது மகள் அனோஷ்காவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த காட்சிகளும் வெளியாகி உள்ளன. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version