இலங்கை

நாளையதினம் இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு!

Published

on

நாளையதினம் இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளைய தினம், சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களால் கைதியொருவருக்கு தேவையான அளவு, உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை எடுத்து வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைக்கைதிகள் பார்வையிடும் விதிமுறைகளுக்கு அமைய நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version