சினிமா

பாட்ஷா 30 ஆண்டுகள்: ரீ ரிலீஸ்… எப்போது?

Published

on

பாட்ஷா 30 ஆண்டுகள்: ரீ ரிலீஸ்… எப்போது?

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கையில் மிக முக்கியமான படம் ஆகும். ரஜினிகாந்த் வாழ்க்கையை பாட்ஷாவுக்கு முன் பாட்ஷாவுக்கு பின் என்றே வகைப்படுத்தலாம்.

நடிகர் ரஜினிகாந்தை தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்துக்கு கொண்டு சென்ற படம் இது. 1995 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. நடிகை நக்மா ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரஜினிகாந்த் படத்தில் மிகப் பெரிய கமர்ஷியல் சக்ஸஸ் படம் பாட்ஷா. இந்த படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார்.

Advertisement

சத்யாமூவிஸ் சார்பாக ஆர்.எம். வீரப்பன் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆவதையொட்டியும் சத்யா மூவிசின் 60வது ஆண்டு நிறைவு விழா மற்றும் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கை 50வது ஆண்டு ஆனதை முன்னிட்டும் பாட்ஷா படம் மீண்டும் வெளியாகவுள்ளது. நான் ஒரு தடவை சொன்னா நுறு தடவை சொன்ன மாதிரி பஞ்ச் டயலாகுகளும் இந்த படத்தில் இடம் பெற்றிருந்தது.

ஏற்கனவே , கடந்த 2017 ஆம் ஆண்டு ஒலி, ஒளித்தரம் மாற்றி, புதிதாக பின்னணி இசை சேர்த்து இந்த படம் வெளியிடப்பட்டிருந்தது. சென்னை மற்றும் செங்கல்பட்டில் வெளியிடப்பட்ட 75 திரையரங்குகளில் பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாகின. தற்போது, பாட்ஷாவின் ரிரீலிஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் ஆர்.எம். வீரப்பன் மனைவி தங்கராஜ் அறிவிப்பார் என்று தகவல்கள் வருகின்றன.

தனுஷ் – வெற்றிமாறன் காம்போ… அடுத்த படத்தின் செம்ம அப்டேட்!

Advertisement

ஆண்டுக்கு 3000 பேருக்கு வேலைவாய்ப்பு : தலைவாசல் கால்நடை பூங்கா திறப்பு!

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version