இலங்கை

புனித ஹஜ் யாத்திரை செல்ல 3,500 இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

Published

on

புனித ஹஜ் யாத்திரை செல்ல 3,500 இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

  இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியா – ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் கைச்சாத்திடப்பட்டதாகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

ஒப்பந்தத்தில் அந்த நாட்டின் ஹஜ் யாத்திரைக்கான பிரதியமைச்சர் அப்துல்ஃபட்டா பின் சுலைமான் மஷாட் (Abdulfattah bin Sulaiman Mashat) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹனிதும சுனில் செனவி ஆகியோரினால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன்போது, புனித ஹஜ் யாத்திரையில் ஈடுபடுபவர்களுக்கான வசதிகள் மற்றும் யாத்திரையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version