டி.வி

மூன்று முடிச்சு சீரியலில் முக்கிய பிரபலம் என்ட்ரி: கதையில் திருப்பம் வருமா?

Published

on

Loading

மூன்று முடிச்சு சீரியலில் முக்கிய பிரபலம் என்ட்ரி: கதையில் திருப்பம் வருமா?

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல், பெரிய எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலில், பிரபல நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரை சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக விஜய் டிவி சீரியல் நடிகைகள் பலரும் தற்போது சன்டிவி சீரியல்களில் நாயகிகளாக நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிக சுவாதி கொண்டே. விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்திருந்த இவர், தற்போது சன்டிவியின் மூன்று முடிச்சு சீரியலில் நடித்து வருகிறார்.தாய் இல்லாத 3 சகோதரிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுவாதி கொண்டே உள்ளிட்ட பலரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது. மேலும் இயக்குனர் அகத்தியன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நந்தன் சி.முத்தையா இயக்கி வரும் இந்த சீரியல், 100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் அசத்தி வருகிறது.A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் குறித்து தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சீரியலில் நடிகர் மிதுன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வெளியில் கணவன் மனைவியாக இருந்தாலும் உள்ளுக்குள் வெறுப்பாக இருக்கும் நந்தினி, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version