இலங்கை

வெளிநாடொன்றுக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி அநுர!

Published

on

வெளிநாடொன்றுக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றிரவு (13-01-2025) சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ சங் மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார்.

Advertisement

இதனையடுத்து தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளும் 2 வது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் மிக முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version