இலங்கை

அரசியல் கைதியொருவர் உட்பட பத்து அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில்!

Published

on

அரசியல் கைதியொருவர் உட்பட பத்து அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில்!

முப்பது வருட தண்டனை பெற்ற அரசியல்கைதியொருவர் உட்பட 10 அரசியல் கைதிகள் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னைய ஆட்சியாளர்களை போன்றே தென்னிலங்கையிலுள்ள சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளார்கள். அவர்களில் சிலருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

சிலரது வழக்குகள் நீண்டகாலமாகவும், குறுகிய காலமாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், நாடாளவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று முன்னெடுப்பதற்குத் தயாராகி வருகின்றேன்.

அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றதெனவும் அமைச்சர் ஹர்சண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே முப்பது வருட தண்டனை பெற்ற அரசியல்கைதியொருவர் உட்பட 10 அரசியல் கைதிகள் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version