சினிமா

கீர்த்தி சுரேஷின் தல பொங்கல்!! எண்ட்ரி விஜய்.. வைரலாகும் வீடியோ..

Published

on

கீர்த்தி சுரேஷின் தல பொங்கல்!! எண்ட்ரி விஜய்.. வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் படம் ரிலீஸுக்கு முன் தன்னுடைய 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் பேபி ஜான் படத்தின் பிரமோஷனில் பிஸியாக இருந்த கீர்த்தி சுரேஷிற்கு அப்படம் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்தது. படுமோசமான வரவேற்பை பெற்றதை வைத்து கீர்த்தி சுரேஷை விமர்சித்தும் இருந்தனர்.இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு இது தல பொங்கல். தற்போது தன் கணவருடன் சேர்ந்து தல பொங்கல் கொண்டாடி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.நீலாங்கரையில் இருக்கும் The Route நிறுவனம் நடத்திய பொங்கல் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் தன் கணவருடன் கொண்டாடி இருக்கிறார்.The Route நிறுவனத்தில் இருக்கும் நடிகர் விஜய், ஜெகதீஷ், கல்யாணி பிரியதர்ஷன், கதீர், மமிதா பைஜு, சஞ்சனா உள்ளிட்டவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ள வீடியோவை The Route நிறுவனம் வீடியோவாக வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களும் கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version