இந்தியா

பொங்கல் போனஸ் தராததால் போராட்டம்: சுங்கச்சாவடியில் இலவசமாக சென்ற வாகனங்கள்!

Published

on

பொங்கல் போனஸ் தராததால் போராட்டம்: சுங்கச்சாவடியில் இலவசமாக சென்ற வாகனங்கள்!

மதுரை – ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பொங்கல் போனஸ் தராததால் போராட்டத்தில் குதித்தனர். இதனால், வாகனங்கள் இலவசமாக சென்றன.

மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பசேத்தியில் அருகே அமைந்துள்ளது திருப்பாசேத்தி சுங்கச்சாவடி. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து போராடியதை அடுத்து, தீபாவளி பண்டிகையின்போது பாதி போனஸ் மட்டுமே வழங்கப்பட்டது. மீதியை பொங்கல் பண்டிகையின்போது பெற்றுக் கொள்ளும் படி கூறியுள்ளனர்.

Advertisement

இதையடுத்து, ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி அந்த மீதி போனஸ் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். தற்போது பொங்கல் பண்டிகைக்கு அந்த மீதி போனஸ் பணத்தை வழங்காததால் ஊழியர்கள் சுங்க‌க் கட்டணம் வசூல் செய்யாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கட்டணம் ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்கின்றனர். வாகனங்களை நிறுத்துவதற்கான தடுப்புகள் திறந்து விடப்பட்டுள்ளதால், வாகன நெரிசல் இன்றி, உடனுக்குடன் கடந்து செல்கின்றன. கட்டணம் இல்லாமல் கடந்து செல்வதை பலர் காரில் அமர்ந்தபடியே செல்போனில் வீடியோ எடுத்து பலருக்கு பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version