இலங்கை

கடந்த கால அரசுகளைக் போன்று இந்த அரசும் செயற்படுவதை அனுமதிக்க முடியாது – சி.வி.கே.சிவஞானம்

Published

on

கடந்த கால அரசுகளைக் போன்று இந்த அரசும் செயற்படுவதை அனுமதிக்க முடியாது – சி.வி.கே.சிவஞானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் அநுர அரசு செயற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
 

அவர் மேலும் கூறுகையில்;
இந்தியாவில் இடம்பெறும் மாநாடு ஒன்றில் பங்குகொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியா புறப்படச் சென்றபோது அங்கே விமான நிலைய அதிகாரிகளால் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பயணத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இராஜதந்திரக் கடவுசீட்டை வைத்திருக்கும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு நடத்தபட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது.
சிவஞானம் சிறீதரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருப்பதுடன் அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய  கட்சியாக உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்குகின்றார். இந்த நாட்டில் இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக அநுர அரசைக் கடுமையாக விமர்சித்து உரையாற்றியும் இருந்தார்.

இந்நிலையிலேயே இவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு  விசாரணைகளின் பின்னர் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, இச்சம்பவம் ஒரு பழிவாங்கும் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எமக்குத் தோன்றுகின்றது. இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அநுர அரசுக்கு உள்ளது.

ஆகவே, எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் அநுர அரசு செயற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமிழர் விவகாரங்களில் கடந்த கால அரசுகளைக் போன்று இந்த அரசும் செயற்படுவதை அனுமதிக்க முடியாது.” – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version