சினிமா
கா. நேரமில்லை ஸ்லோவா போனாலும் ஒரு குட் ஃபீலா இருக்கு!ப்ளூ சட்டையின் பாசிட்டிவ் விமர்சனம்
கா. நேரமில்லை ஸ்லோவா போனாலும் ஒரு குட் ஃபீலா இருக்கு!ப்ளூ சட்டையின் பாசிட்டிவ் விமர்சனம்
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், வினய் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வித்தியாசமான கதை களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.இந்த நிலையில், காதலிக்க நேரமில்லை படத்திற்கு தனது பாசிட்டிவ் விமர்சனத்தை அளித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதன்படி அவர் கூறுகையில், படத்தின் கதையை பொறுத்தவரையில் இரண்டு ஜோடிகள் திருமணம் செய்ய முயற்சி செய்கின்றார்கள். அதில் நித்தியா மேனன் திருமணம் செய்ய இருந்தவர் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்ததால் அவரை திருமணம் செய்யவில்லை. மேலும் பாட்னர்ஷிப் வாழ்க்கையில் விருப்பம் இல்லை என்றாலும் குழந்தை பெற்றுக்கொள்ள நித்தியாமேனன் முயற்சி செய்கின்றார்.அதேபோல ரவி மோகனைப் பொறுத்தவரையில் குடும்ப பொறுப்பு அவருக்கு பிடிக்கவில்லை. அதிலும் குழந்தை பெறுவதற்கு துளியும் விருப்பம் இல்லை. இதனால் அவருடைய திருமணமும் நின்று விடுகின்றது. அதன் பின்பு நித்தியாமேனனும் ரவியும் சந்தித்து பழகுகின்றார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்பது தான் கதை.இந்த படத்தின் கதை வித்தியாசமானதாகவும் சிக்கல் உடையதாகவும் காணப்படுகிறது. இந்த படம் முழுவதும் லிவிங் டுகெதர், பிரேக் அப், சிங்கிள் பேரன்டிங் என்று பேசக்கூடிய படமாக காணப்படுகின்றது. இதில் நாங்கள் அடிக்கடி கேட்கப்படும் விஷயங்கள் தான். புதிதாக எதுவும் இல்லை.இந்தப் படத்தில் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை என்றாலும் கதையை ஒரே நேர்கோட்டில் எடுத்துள்ளார்கள். ஹீரோ, ஹீரோயினிடம் நல்லா வேலை வாங்கி உள்ளார்கள். இந்த படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை என்பது சிறப்பாக உள்ளது.படம் முழுவதும் ஸ்லோவாக இருந்ததே தவிர சலிப்பு தட்டவில்லை மொத்தத்தில் இந்த படம் வித்தியாசமாகவும் கொஞ்சம் சிக்கலான கதையையும் கொண்டதாக காணப்படுகின்றது. படம் ஸ்லோவா போனாலும் ஒரு குட் ஃபீல் அனுபவத்தை கொடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.