உலகம்

நைஜீரிய இராணுவம் இலக்கு தவறி தாக்கியதில்: 16 பேர் சாவு!

Published

on

Loading

நைஜீரிய இராணுவம் இலக்கு தவறி தாக்கியதில்: 16 பேர் சாவு!

நைஜீரிய இராணுவம் தவறுதலாக நடத்திய விமானத் தாக்குதலில் 16 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் வடமேற்கு ஜம்ஃபாரா மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்களை கடத்தி கப்பம் கோரும் குற்றச் செயல் கும்பல் என தவறுதலாகக் கருத்தப்பட்டு இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் உள்ளுர் ஊடகங்களுக்கு கூறியுள்ளனர்.

Advertisement

இத்தாக்குதல்கள் சுர்மி மற்றும் மரடூன் பகுதிகளில் உள்ள ஆயுதக் கும்பல்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத் தாக்குதல் நடத்தியதை இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பில் விரிவான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாநில ஆளுநர் தௌடா லாவா இத்தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்து கொண்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version