சினிமா

பணப்பெட்டி டாஸ்க்! மூடப்படும் கதவு! ராயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published

on

பணப்பெட்டி டாஸ்க்! மூடப்படும் கதவு! ராயனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது வரையில் நடைபெறாத மணி டாஸ்க் இந்த முறை வித்தியாசமாக நடைபெறுகிறது. 1 வாரமாக வைக்கப்பட்ட பணப்பெட்டியை யாரும் எடுக்காத நிலையில் பிக்பாஸ் பணப்பெட்டியை எடுத்தாலும் உள்ளே விளையாடலாம் எடுக்கவில்லை என்றால் வெளியேறலாம் என்று டாஸ்க் வைக்கிறார். இந்நிலையில் முதலில் வைக்கப்பட்ட டாஸ்க்கின் படி முத்து பணப்பெட்டியை எடுத்து வெற்றி பெற்றார். தற்போது வெளியாகிய ப்ரோமோவில் 2 லட்சம் பணம் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. 25 வினாடிகள் அந்த பெட்டியை எடுப்பதற்கு வழங்க படுகிறது. தூரம் 45 மீட்டர் பணத்தை எடுக்கப்போவது யார் என்று பிக்பாஸ் கேட்கிறார். ரயான் “நான் எடுக்கிறேன் பிக்பாஸ்” என கையை உயர்த்தி சொல்கிறார். மற்ற போட்டியாளர்கள் அவருக்கு உற்சாகம் செய்கிறார்கள். மணி அடித்ததும் வேகமாக ஓடிய ரயான் பணப்பெட்டியை எடுத்து கொண்டு வேகமாக ஓடிவருகிறார். நேரம் நிறைவடைந்ததால் கதவு மூடப்படுகிறது. இதற்குள் ரயான் வீட்டிற்குள் வந்து விட்டாரா என்று தெரியவில்லை எபிசோட் வரை காத்திருப்போம்.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version