சினிமா

பொங்கல் ரேஸில் எதிர்பாராத ட்விஸ்ட்..? நேசிப்பாயா, கா. நேரமில்லை முதல் நாள் வசூல்?

Published

on

பொங்கல் ரேஸில் எதிர்பாராத ட்விஸ்ட்..? நேசிப்பாயா, கா. நேரமில்லை முதல் நாள் வசூல்?

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படங்களில் மதகஜராஜா, காதலிக்க நேரமில்லை மற்றும் நேசிப்பாயா ஆகிய படங்கள்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் மதகஜராஜா திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.இந்த நிலையில், ரவி நித்யா – மேனன் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை படம் மற்றும் ஆகாஷ் முரளி – அதிதி சங்கர் நடிப்பில் வெளியான நேசிப்பாயா உள்ளிட்ட படங்களின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. ஆனாலும் தற்போது வரையில் மதகஜ ராஜாவின் வசூல் தான் உயர்ந்து நிற்கின்றது.கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்  ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை படத்திற்கு முதல் நாள் வசூலை 2.35 கோடிகள் தான் என கூறப்படுகின்றது. எனினும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வசூல் இன்னும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி முதல் முதலாக ஹீரோவாக அறிமுகமான நேசிப்பாயா படத்தில் அதிதி சங்கர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வெறும் 20 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளன.அதேபோல பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களாகும் நிலையில் மொத்தமாகவே 4. 54 கோடிகளை தான் இந்த படம் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.இந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படங்களில் மதகஜ ராஜா படம் தான் வசூலில் வெற்றி பெற்ற படமாக காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே 6.5 கோடிகளை வசூலித்துள்ள நிலையில், நேற்றைய தினம் மட்டும் ஆறு கோடி ரூபாய் வசூலித்து மொத்தமாக 12 . 50 கோடிகள் கலெக்ஷன் பண்ணி உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version