இலங்கை
யாழில் திருமணமான இரு மாதத்தில் இளைஞன் உயிர்மாய்ப்பு
யாழில் திருமணமான இரு மாதத்தில் இளைஞன் உயிர்மாய்ப்பு
யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (14) மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள புகையிரத பாதையில்இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
திருமணமாகி இரண்டு மாதங்களான இவ்வாறு உயிரை மாய்துள்ளதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.