இலங்கை

வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கிய நிதி தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Published

on

வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கிய நிதி தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக 271 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள நிலையில் பொதுப் பாதுகாப்புக்காக 614 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாகவும் இது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்த கல்விக் கொள்கைக்கு முரணாணது எனவும் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்குமாறு கடந்த அரசாங்கங்களை வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி, போர் இல்லாத சூழலில் பாதுகாப்புச் செலவை அதரிகரித்தது ஏன் என சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

பாதுகாப்பு அமைச்சின் மூலதனச் செலவு 76 பில்லியன் ரூபாவாக இருந்தாலும் கல்விக்கான மூலதனச் செலவு 65 பில்லியன் எனக் கூறிய அவர் கல்விக்கு இதை விட நிதியை ஒதுக்க வேண்டும் என வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கல்விக்கு 6 வீதத்தை ஒதுக்குங்கள் எனக் கோரி, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் சங்கம் அண்மையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன் போராட்டம் நடத்தியிருந்தமை இதன்போது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version