இலங்கை

வெலேசுதா’ உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

Published

on

வெலேசுதா’ உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

  பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவருமான ‘வெலேசுதா’ என உட்பட மூவருக்கு 08 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்கள் மூலம் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சம்பாதித்தமை தொடர்பில் வெலேசுதா, அவரது மனைவி கயானி பிரியதர்ஷனி மற்றும் உறவினப் பெண் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்போது, வெலேசுதா, அவரது மனைவி கயானி பிரியதர்ஷனி மற்றும் உறவினப் பெண் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version