தொழில்நுட்பம்
வாட்ஸ் அப்பில் செல்ஃபியை ஸ்டிக்கராக மாற்றலாம்… ஃபில்டர், விசுவல் எஃபெக்ஸ்.. மெட்டா தந்த சூப்பர் அப்டேட்!
வாட்ஸ் அப்பில் செல்ஃபியை ஸ்டிக்கராக மாற்றலாம்… ஃபில்டர், விசுவல் எஃபெக்ஸ்.. மெட்டா தந்த சூப்பர் அப்டேட்!
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப கவர்ச்சியான புதுப்புது அப்டேட்களை அளித்து வருகிறது. பயனர்களின் வசதிக்காகவும் அவர்களை ஈர்க்கவும் புதிய அப்டேட்களை உருவாக்கும் பணியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. வாட்ஸ் அப் செயலியின் பயன்பாடு என்பது தனிப்பட்ட முறையிலும், வேலை, தொழில் உள்ளிட்டவற்றில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு சிறப்பான அனுபவத்திற்காக புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ் அப்பில் ஜூன், 2024-ல் மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம்.வாட்ஸ் அப்பில் செல்ஃபியை ஸ்டிக்கராக மாற்றும் அப்டேட்வாட்ஸ் அப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றவாறு பல்வேறு அப்டேட்களை வழங்கி வரும் மெட்டா நிறுவனம், செல்ஃபியை ஸ்டிக்கராக மாற்றவும் ஃபில்டர், விசுவல் எஃபெக்ட்ஸ் என ஈர்க்கும்படியான அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமல்ல, வாட்ஸ் அப், ஃபோட்டோ மற்றும் வீடியோவில் 30 ‘Background’ ஃபில்டர் வகைகளை அறிமுகம் செய்துள்ளது. வீடியோ அழைப்புகளில் ‘Backgraound’ மாற்றிக்கொள்ளலாம். ஸ்நாப்சாட் செயலில் உள்ள போன்ற வசதிகளையும் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் கேமராவில் செல்ஃபி எடுத்து, அதை ஸ்டிக்கராக மாற்றும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கேமராவில் உள்ள ‘Sticker’ என்பதை க்ளிக் செய்தால் செஃல்பி ஸ்டிக்கராக மாறிவிடும். இந்த வசதி ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஃபோன் பயனபர்களுக்கு விரைவில் வெளியாகும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் வாட்ஸ் அப் உரையாடலில் ஸ்டிக்கர் அதிகம் பயன்படுத்துபவர் என்றால், உங்களுக்கு இது ஒரு சூப்பரான அப்டேட். ஆம், உங்கள் நண்பர்களுக்கும் பிடித்த ஸ்டிக்கர்களை இனி அவர்களுடன் பகிந்துகொள்ளலாம்.’sticker pack’ ஐ அனுப்பும் வசதி அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப் சாட்டில், ‘Quicker reactions’ வசதி ஏற்கனவே இருந்ததுதான். ஆனால், இப்போது மெசேஜை ‘double tap ‘ செய்தால் உடனடியாக ரியாக்ட் செய்ய முடியும். இந்த அப்டேட்டை எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.