டி.வி
சைஃப் அலி கான் விவகாரம்…! கத்தியால் குத்திய மர்ம நபர் அதிரடியாக கைது..
சைஃப் அலி கான் விவகாரம்…! கத்தியால் குத்திய மர்ம நபர் அதிரடியாக கைது..
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை சமீபத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தீவிரமாக அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்துவந்த நிலையில் நபரை காவல்துறையினரால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நேற்று முன் தினம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையிலேயே இது திருட்டு சம்பவத்திற்காக நடந்ததா அல்லது கொலை முயற்சியா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ஆறு இடங்களில் கத்திக்குத்து வாங்கியுள்ள சைஃப் அலிகான் மும்பை, லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது அபாயக்கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் அதிரடியாக தேடி வந்தனர்.நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபரின் உருவம் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் கையில் கிடைக்கவே அதனை கொண்டு தேடுதல் விசாரணையில் இறங்கினர். தற்போது மும்பை காவல்துறையினர் சந்தேகப்படக்கூடிய ஒருவரை விசாரணைக்காக இன்று பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் தாக்கலுக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.