உலகம்

ஈரானில் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டுக் கொலை

Published

on

ஈரானில் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டுக் கொலை

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் இன்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு நீதிபதிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கைத்துப்பாக்கியுடன் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

Advertisement

பலியானவர்கள் அல் ரஜினி மற்றும் அல் மொகிஸ்சே என அடையாளம் காணப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் போன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தி வந்தவர்கள் என ஈரானின் நீதித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version