இலங்கை

ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயமாகிறது!

Published

on

ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயமாகிறது!

ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக புதிய கட்டமைப்பொன்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

Advertisement

இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பில் பல அரசு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஐந்து துறைகளின் கீழ் இதற்கான பணிகள் இடம்பெறும்.

ஓய்வூதியத் துறையின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை ஓய்வு பெற்றவர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் நட்பு முறையில் வழங்குவதே இந்த டிஜிட்டல் கட்டமைப்பின் நோக்கம் என்று அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன கூறியுள்ளார்.

டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாக புதிய இணையத்தளமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகையிரதம், பஸ்களில் பயணிக்கும் ஓய்வூதியகாரர்களுக்கு பயண சீட்டு ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட உள்ளது. விதவை மற்றும் அனாதை திட்டத்திற்கான பதிவு மற்றும் தகவல் அமைப்பு, பொது ஊழியர் வருங்கால வைப்பு நிதி செயல்முறை, ஓய்வூதியதாரர் இறப்பு சான்றிதழை இலகுவாக பெறும் முறை என பல்வேறு விடயங்கள் புதிய டிஜிட்டல் கட்டமைப்பில் உள்வாங்கப்பட உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version