இலங்கை

மட்டக்களப்பு வாவியில் அடையாளம் காணப்படாத பெண் சடலம்

Published

on

மட்டக்களப்பு வாவியில் அடையாளம் காணப்படாத பெண் சடலம்

மட்டக்களப்பு நகர் வாவியில், நீரில் மூழ்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம், இன்று (18) காலை 10 மணிக்கு அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில், நீரில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதை கண்டு, பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கினர்.

Advertisement

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த மட்டு. தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version