இலங்கை

வீடொன்றில் சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published

on

வீடொன்றில் சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபாவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைப்பற்றியுள்ளது.

குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றை சோதனையிட்டபோதே 280 மில்லியன் ரூபா பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் சிறைச்சாலைக்குள் இருந்தவாறு போதைப்பொருள் வர்த்தகத்தை வழிநடத்தி வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த முற்றுகையில். 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், கெப் ரக வாகனம் ஒன்றும் மற்றும் வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தற்போது சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version