தொழில்நுட்பம்

காசி தமிழ்ச் சங்கமம் 2025: ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

Published

on

காசி தமிழ்ச் சங்கமம் 2025: ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

காசி தமிழ்ச் சங்கமம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும். உத்தரப் பிரதேசத்தின் காசி மற்றும் தமிழ்நாட்டின்  கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில்  கடந்த 3 ஆண்டுகளாக இது நடத்தப்படுகிறது.  காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இந்தாண்டு பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் என அண்மையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இந்தாண்டு காசி தமிழ்ச் சங்கமம் மகா கும்பமேளா உடன் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு ரயில் வசதி உள்ளட்டவை ஏற்பாடு செய்யப்பட உள்ளது. காசி தமிழ்ச் சங்கமத்தின் போது இந்தாண்டு ராமர் கோயில் உள்பட பல்வேறு கோயில்கள் மற்றும் கலாச்சார இடங்களுக்கு அழைத்து செல்லப்படும். முன்னதாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள காசி தமிழ்ச் சங்கமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 1. முதலில் https://kashitamil.iitm.ac.in/home என்ற காசி தமிழ்ச் சங்கமத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.2. அதன் பின் பதிவு என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.3. இப்போது அதில் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் பெயர், இ-மெயில், நீங்கள் செய்யும் வேலை உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.4.  அடுத்து உங்கள் ஆதார் எண், கல்வி, ஆன்மீக விருப்பம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படும்.5. அடுத்தபபடியாக உங்கள் அடையாள அட்டை ஏதேனும் ஸ்கேன் செய்து பதிவிட வேண்டும்.6.  கேப்சா பதிவிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும்.இதன் பின் உங்கள் இ-மெயிலுக்கு வினாடி-வினா வரும். அந்த போட்டியில் பங்கேற்க வேண்டும். இந்த போட்டிக்கு பின் உங்கள் தேர்வு பற்றிய நிலை அறிவிக்கப்படும்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version