உலகம்

போதைப்பொருள் வைத்திருந்த தந்தையை காவலர்களிடம் புகார் அளித்த 10 வயது மகன்

Published

on

Loading

போதைப்பொருள் வைத்திருந்த தந்தையை காவலர்களிடம் புகார் அளித்த 10 வயது மகன்

பிறந்தநாளுக்கு முன்பே வீட்டுப்பாடத்தை முடித்தாக வேண்டும் என்று தமது 10 வயது மகனிடம் கூறியிருந்தார் சீனாவைச் சேர்ந்த ஒரு தந்தை.

ஆனால், வீட்டுப்பாடத்தை அந்த மகன் முடிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்தத் தந்தை சிறுவனைத் திட்டினார்.

Advertisement

உடனே, அந்தச் சிறுவன் தன் தந்தை போதைப்பொருள் வைத்திருப்பதாகக் காவலர்களிடம் புகார் அளித்துவிட்டார்.

சீனாவின் யின்சுவான் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், சிறுவன் திட்டு வாங்கியதும் வீட்டை விட்டு வெளியேறி, கடை ஒன்றில் தன் தந்தை மீது காவல்துறைப் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. 

அபின் என்ற போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கசகசாவைத் தன் தந்தை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக அந்தச் சிறுவன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

Advertisement

புகார் கிடைத்ததும் காவல்துறை அதிகாரிகள், சிறுவன் இருந்த கடைக்குச் சென்று அவனுடன் வீட்டுக்குச் சென்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சிறுவனின் தந்தை மறைத்து வைத்திருந்த கசகசாவை அவர்கள் கண்டுபிடித்தனர். 

மருத்துவச் சிகிச்சைக்காக தாம் அதை வைத்திருந்ததாகச் சிறுவனின் தந்தை கூறி, தமது வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.ஆனால், இறுதியில் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

Advertisement

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version